2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

அத்துமீறி கடை அமைக்க முயற்சி: தடுத்து நிறுத்தம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி பஸ் நிலைய வளாகத்தில், அத்துமீறி கடை அமைக்க முயற்சித்த நிலையில், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தடுத்து நிறுத்தியது.

கிளிநொச்சி பஸ் நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படது.

இந்த நிலையில், இன்று (06) காலை, தற்காலிக கடைகளை பஸ் நிலைய வளாகத்தில் அமைக்க வர்த்தகர்களல் நடவடிக்கை எடுத்தப்பட்டது.

இந்த நிலையில், அங்கு வருகை தந்திருந்த வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட அலுவலர் ஈ.சாந்த மெடில்டா, வர்த்தகர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த பகுதியில், எவ்வித அபிருத்தியும் செய்ய வேண்டாம் எனவும், பஸ் நிலையம் திறக்கப்பட்டதன் பின்னரே வர்த்தக நிலையம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஈ.சாந்த மெடில்டா  தெரிவித்தார்.

இதையடுத்து, அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது தாம் செயற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தற்காலிக கடைகளை தாம் பொருத்தமான பகுதிகளில் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்பொழுது மேற்கொள்ளப்படும் பஸ் நிலைய அபிவிருத்தி காரணமாக, தற்காலிக கடைகளை நடத்துவதில் வர்த்தகர்களுக்கு முடியாதுள்ளதாகவும், அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X