2025 மே 22, வியாழக்கிழமை

’அத்துமீறிய விதைப்புகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழ், இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மேலதிக விதைப்புகள், அத்துமீறிய விதைப்புகளை மேற்கொண்டவர்களுக்கு பயிர்ச்செய்கை கூட்டத்தீர்மானத்தின் படி உரிய  நடவடிக்கை எடுக்கப்படுஅமன, மாவட்டச் சௌலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் அத்துமீறிய விதைப்புகள் மேற்கொண்டவர்களுக்கு, மேற்படி பயிர்ச்செய்கை கூட்டத் தீர்மானத்துக்கு அமைவாக ஐந்து வருடங்களுக்கான அரச மானியங்கள் நிறுத்தவும் மேலதிக விதைப்புகளை மேற்கொண்டவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பொருத்தமான காலத்துக்கு ஏற்ப சிறுபோக மானியத்தையும் நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X