Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றின் ஊடாக, உடன் நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக, வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வெங்கல செட்டிகுளம், ஆண்டிய புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உடையார்கட்டு குளம் உடைப்பெடுத்தமையால், 15 ஏக்கர் நெற்காணி பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் ஏதாவதொரு பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமாக இருந்தால், அந்தப் பகுதிக்குரிய பிரதேச செயலாளரூடாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவியுடன், உடனடி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .