Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
‘சபைகளிலே இருக்கின்ற அனைவரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும்” என வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மன்னார் - அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலக கட்டிடம் திறக்கும் நிகழ்வு இன்று (17) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், 'கூட்டுறவே நாட்டுறவு' என்று சொல்வார்கள்.நீங்கள் எல்லோறும் இணைந்தால் தான் ஒரு பிரதேசத்தை, மாவட்டத்தை, ஒரு மாகாணத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனை உங்கள் அனைவருடைய மனதிலும் இருக்கின்றது.
“ஒரு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் அந்த மாகாணத்திலே அடிப்படையிலே இயங்கி வருகின்ற அமைப்புக்களில் மூன்று அமைப்புக்களை நாங்கள் கூற முடியும்.
“மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் பிரதி நிதிகளாக மக்களின் சேவைகளை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர் பார்ப்பும். எக்கருத்துகளை கொண்டவர்களாகவும் இருக்கலாம்,எந்த கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்,எந்த மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் தமது கிராமங்களின் பிரதி நிதிகளாக அனுப்புகின்றனர்.
“கடந்த வாரத்தில் இந்த மாகாணத்திலே இரண்டு பாரிய பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளது.யாழ் மாநகர சபையிலே மூன்று நாள்களாக குப்பைகளை எடுக்கவில்லை. அதேபோல வவுனியா நகரத்திலே தொடர்ந்து ஒரு வாரம் குப்பைகள் அகற்றப்படவில்லை.
“இதற்கு பின்னனியாக என்ன காரணங்கள் இருந்தாலும் சபைகளிலே இருக்கின்ற அனைவரும் அதாவது ஆளும் கட்சி,எதிர்க் கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையை முடக்காது செயற்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இதனைத்தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
“நாங்கள் அரச சேவையை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் மக்களின் பிரதிநிதிகள் உங்களின் ஒத்துழைப்புக்களை எங்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இல்லாதுவிட்டால் அந்த சேவை அடி மட்டத்தில் மக்களை சென்றடையாது” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago