2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அபிவிருத்திகுழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் (சொட்கன்) எமக்கும் தாருங்கள் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் (துப்பாக்கி) மீள் எடுக்கப்பட்டமையால், தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

அத்துடன், விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் என தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியூதீன் பொலிஸாரிடம் கேட்டபோது, அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன், இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா மாவட்டச் செயலாளர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செயலகத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ்விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட செல்வம் அடைக்கலநாதன், தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம் என நகைச்சுவையாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .