Editorial / 2019 மே 07 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு, இதுவரை, மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், 2.60 மில்லியன் ரூபாயும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 4.17 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 4 வரையான வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் 6 வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, கடந்தாண்டில், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய, மாகாண அமைச்சுகள் என்பவற்றின் ஊடாக, 44.50 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று, அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago