2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் மற்றும் கிளி. பஸ் உரிமையாளர்கள் அவசர சந்திப்பு

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் பயனுறுதி வாய்ந்ததுமான சிறந்த போக்குவரத்து சேவையினை வழங்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை வட மாகாண போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

அதனொரு அங்கமாக, கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களை, நாளை வெள்ளிக்கிழமை (16), மன்னார் நகர சபை மண்டபத்தில் மு.ப 10 மணிக்கு, சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில், பல பஸ் உரிமையாளர்கள் அற்றோணித் தத்துவத்தின் ஊடாக, பஸ்களை கைமாற்றி இருப்பதும், பலர் சட்டத்திற்க்குமுறணாக பஸ்களை கையுதிர்த்திருப்பது தொடர்பிலும், பல்வேறு முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்கப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மேற்படி பிரச்சினைகளை உரியமுறையில் தீர்த்துக்கொள்வதற்கும், பாரிய முறைகேடுகள் காணப்படின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமே குறித்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. குறித்த ஒன்றுகூடலுக்கு வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் ஒன்றிய நிர்வாகத்தினரும், கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சங்க நிர்வாகத்தினர் மற்றும் அற்றோணித் தத்துவக்காரர்களும், அற்றோணித் தத்துவத்தை கொடுத்தவர்களும் தவறாது சமூகமளிக்குமாறும்.

குறித்த ஒன்றுகூடலுக்கு வருகை தரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விடயத்தோடு தொடர்புடைய பொருத்தமான ஆவணங்களையும் கொண்டுவருமாறும் அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .