2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமைப்புக்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்

Niroshini   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மாவட்டத்தின் அபிவிருத்தி, மக்களின் அபிவிருத்தி கருதி உருவாக்கப்படும் அமைப்புக்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உதவி பிரதேச செயலர் கி.பிருந்தாகரன் தெரிவித்தார்.

மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் மாவட்ட இணையத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட செயலக தொழிற்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல அமைப்புக்கள் காணாமல் போயுள்ளன. அவ்வாறில்லாமல் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் மாவட்ட இணையம் திறமையாக செயற்பட வேண்டும்.
மாவட்டத்தின் அபிவிருத்தி, மக்களின் அபிவிருத்தி கருதி உருவாக்கப்படும் அமைப்புக்கள் இலக்கினை கருத்தில் கொண்டு முன்மாதிரியாக திகழ வேண்டும்' என்றார்.

கரைச்சி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் 68, கண்டாவளை மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் 26, பூநகரி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் 41, பளை மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் 22 ஆகியவற்றை இணைத்து மாவட்ட இணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலர், உதவி பிரதேச செயலாளர், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .