2025 மே 05, திங்கட்கிழமை

அமெரிக்காவை இலங்கை தீவுக்கு வருமாறு அழைப்பு

Freelancer   / 2022 ஜூலை 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

அமெரிக்கா இங்கு வந்து இந்தத் தீவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்கா ஸ்ரீலங்காவுக்கு உதவுவதையும்,  அமெரிக்கா அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும். 

தமிழர்களின் போராட்டம் என்றும் ஓயாது. தமிழருக்கு இறையாண்மையின்றி இலங்கை ஒரு தேசமாக வாழ முடியாது. சிங்கள பௌத்த மகாசங்கம்  தமிழர்களை  அவர்களது  சொந்த புராதன நிலங்கலில்  வாழ விடமாட்டார்கள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சொந்த இறையாண்மை இருப்பது நல்லது.

தமிழர்கள் தங்கள் இழந்த இறையாண்மையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். நாம் நம்மை ஆள விரும்புகிறோம், நமது பொருளாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் நாம் வழி நடத்த  விரும்புகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உட்பட போரில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா அழைத்து, இந்த மக்களுடன்  கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்துங்கள் அல்லது சிங்களவர்களுடன் பேசித் தமிழர்களுக்கு இறையாண்மையைக் எடுத்து தாருங்கள்  என்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X