2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அமைதி கல்வித் திட்டம் ஆரம்பம்

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அமைதி கல்வித் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு, வவுனியா -பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில், பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித் திட்டம் தொடர்பான பத்து நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளன.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைதி கல்வித் திட்டத்தின் இணைப்பாளர் பி.விமலநாதசர்மா, உளவளத்துணை ஆலோசகர் செல்வி. குகானந்தராஜா கீர்த்திகா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .