Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில், 2012ஆம் ஆண்டு, அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டு 1 இலட்சம் ரூபாய் மானியமாகவும் 2 இலட்சம் ரூபாய் கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் 50 பெயருக்கான வீடுகள் அமைக்கப்பட்டன.
குறித்த பகுதியில், வீடுகளை அமைத்து அங்கு குடியேறும் அரச உத்தியோகத்தர்களுக்கான மின்சார வசதி, வீதி வசதிகள், குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட நிலையிலும், குறித்த இடத்தில் இன்று வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை.
இந்நிலையில், குறித்த வீடுகள் அனைத்தும் பத்தைகள் மூடி காடாக கிடைப்பதோடு, அந்த பகுதியில் பல்வேறு சமூகவிரோத சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும், இந்த வீட்டுத்திட்டத்தில் மக்களை குடியேற்றுமாறு பல தடவைகள் மாவட்ட மட்டங்களில் பிரதேச மட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் தெரிவித்தும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் குறித்த பகுதியில் வீட்டு திட்டத்தை பெற்றுக் கொண்டவர்கள் பலர், இரண்டாவது தடவையாகவும் வேறு இடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே, வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்டு அந்த இடத்தில் குடியேறி இருக்கிறார்கள்.
மக்கள், ஓர் இடத்தில் கூட வீடு பெறமுடியாத நிலை இருக்கின்ற போதும், அரசாங்கத்தினுடைய சலுகைகளை இரண்டுமுறை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது, குறித்த வீட்டுத்திட்டம் எந்த பயன்பாடுமாற்ற நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளின் மையமாக மாறியுள்ள நிலைமை, இவ்வாறு இருக்க குறித்த இரண்டாவது வீட்டையும் பெற்ற அதிகாரிகளிடமிருந்து குறித்த வீடுகளை மீள பெற்று வீடு
இல்லாதவர்களுக்கு வழங்கவோ அல்லது அவர்களை குடியிருத்தவோ எந்த ஓர் அதிகாரிகளோ மாவட்ட அபிவிருத்தி குழுவோ இதுவரை ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை.
இது இவ்வாறு இருக்க துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில், நந்தகுமார் நகர் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கென வழங்கப்படட வீடுகள் பூட்டிய நிலையில் காணப்படுவதாக, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கைலாய வன்னியன் மாதிரி கிராமம் பண்டாரவன்னியன் மாதிரி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் அமைக்கப்பட்ட வீடுகளில் அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது.
இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்படுகின்ற வீடுகள் தொடர்ச்சியாக பயன்பாடற்று கிடக்கின்ற நிலையில், இப்போது புதிதாக ஏ9 வீதி மாங்குளத்தில் ஓர் அரச வீட்டுத்திட்டத்தை கொண்டு வருவதற்காக, அரச அதிகாரிகள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக, இன்று வரை இவ்வாறு மக்கள் குடியிருக்காத அரச உத்தியோகத்தர்கள் குடியிருக்காத வீடுகளில், மக்களை குடியமர்த்த முடியாத அதிகாரிகள், புதிதாக அரச உத்தியோகத்தர்களை இலக்காக கொண்டு வீட்டுத்திட்டம் அமைப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 minute ago
30 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
48 minute ago