2025 மே 08, வியாழக்கிழமை

’அரசியல் கட்சிகளாலேயே கருணா துரோகி ஆக்கப்பட்டார்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

அரசியல் கட்சிகளிடத்தில் வேறு விடயம் இல்லாதமையால், கருணா அம்மானை துரோகி ஆக்கி கடந்த பத்து வருடங்களாக அரசியல் செய்தார்களெனத் தெரிவித்த தமிழர் ஐக்கியசுதந்திர முண்ணனியின் வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார், ஆயினும் மக்கள் உண்மையை உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.


  வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமது கட்சி அனைத்து மக்களுக்குமானது எனவும் வன்னி மண் போரினால் பாதிக்கப்பட்ட இரத்த பூமியாக இருக்கிறது எனவும்கூறினார்.

 அந்த நிலமையை மாற்றவேண்டுமெனத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் வடக்கில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக நாம் வலம் வருவோமெனவும் தமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து தூய்மையானதாக இருக்குமெனவும் கூறினார்.

"அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக ஏனையோரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களது விடுதலை என்பது நீதிமன்றின் கைகளில் இருக்கின்றது.  ஆகையால், அந்த நிலுவையில் உள்ள வழக்குகள் ஆராயப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்படுவர். 

"எமது தலைவர் கருணாவாலேயே 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அன்று விடுதலை செய்யப்பட்டனர். அது அனைவரும் அறிந்ததே. எனவே அரசியல் கைதிகள் முழுவதுமாக விடுவிக்கப்படுவர். அது கண்டிப்பாக இடம்பெறும். 

" எமது தலைவர் கருணா தூய்மையானவர் என்பதை தற்போது அனைவரும் புரிந்துள்ளனர்.  அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எமது தலைவனுக்கு திணிக்கப்பட்டே அந்த பட்டம் வழங்கப்பட்டது. அது தற்போது கரைந்துகொண்டு வருகின்றது. தற்போது தவறு என்ன? அது எங்கே நடந்தது என்ற விடயம் மக்களுக்கு நன்றாக தெரியும்" என்றும் கூறினார்.

அது அரசியலாக்கப்பட்டு, அரசியல் கட்சிகளிடத்தில் வேறு விடயம் இல்லாதமையால் கருணா அம்மானை துரோகிஆக்கி கடந்த பத்து வருடங்களாக அரசியல் செய்தார்கள் எனத் தெரிவித்த அவர், "இப்போது எமக்கான நேரம் வந்துள்ளது. அதனால் நாம் களம் இறங்கியுள்ளோம். நாம் அதில் வெற்றியடைந்து மக்களின் மனதை வென்றெடுப்போம்" என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான் எனத் தெரிவித்த அவர், அதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அதனுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக தமது தலைமையே தீர்மானிக்கும் எனவும் கூறினார்.

"எமது மக்களுக்கு தூய்மையான அரசியலை வழங்க வேண்டும் என்பதில் எமது தலைவர்  உறுதியாக இருக்கின்றார். எனவே நாம் முண்ணனி வகித்து ஒரு கூட்டமைப்பினை அமைப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X