2025 மே 05, திங்கட்கிழமை

அரசியல் கைதிகள் விவகாரம்: மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஐ.நாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுப்போமென, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்படுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.

தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டுத் தொடரிலே, வெளிவிவகார அமைச்சரை தமிழக்; கட்சி பிரிதிநிதிகள் அனைவரும் சந்தித,  அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்திப்பை ஏற்படுத்தி தருமாறு கோரியதை ஞாகபகப்படுத்தியதாகத் தெரிவித்த செல்வம் எம்.பி,  அதற்கு, என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து என்னிடம் சொல்ல வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதியாக கலந்துகொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்தவகையிலே அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விவரத்தையும் கையளித்திருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த வகையிலே ஜனாதிபதியோடு பேசி மீண்டும் ஜனாதிபதியோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றுத்தருவதாக தினேஸ் குணவர்தன உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X