Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 18 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நல்லாட்சி அரசாங்கத்தில், அரச உத்தியோகத்தர்கள் எவருக்கும் அரசியல் பழிவாங்கல் இல்லை. அவர்கள், சுதந்திரமாக மக்களுக்கு சேவைகளை வழங்க முடியும்” என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றி வந்த கிராம அலுவலர்கள் மூவர், முன்னைய அரசாங்கத்தினால் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில், நேற்று (17) நடைபெற்ற, கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த விஜயகலா, “இந்தப் பகுதியில் கடமையாற்றிய கிராம அலுவலர்கள் மூவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேலை செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னைய அரசாங்கத்துடன், அராஜக ஆட்சி நடத்தியவர்களால், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். இவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில், அவர்களது வேலை மீளவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
இனிமேல் அரசியல் பழிவாங்கல்கள் எதுவுமே இல்லை. கிராம சேவையாளர்களோ அல்லது எந்தவோர்அரச அதிகாரிகளும் அவர்களது கடமைகளை உரிய முறையில் செய்யமுடியும். ஓவ்வொரு குடும்பமும் இந்தக் கிளிநொச்சி மாவட்டத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் பாதிக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
கடந்தகால அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கிய அரசியல் தலைவரால், கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றிய கிராம அலுவலர்கள் மூவர், கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், தட்டுவன்கொட்டி கிராமத்தில் கடமையில் இருந்த கிராம அலுவலரை, எந்தவிதக் காரணங்களும் இன்றி, தனக்கு ஆதரவாகச் செயற்படவில்லை எனத்தெரிவித்து, இடமாற்ற விதிமுறைகளுக்கு மாறாக, பூநகரிக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால், குறித்த கிராம அலுவலர், கண்டாவளைப்பிரதேச செயலகத்துக்கு, தற்போது மீளவும் இடமாற்றப்பட்டு, தன்னுடைய கடமைகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
45 minute ago