Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - வற்றாப்பளை வீதிப் புனரமைப்புப் பணிகள், முழுமைப்பெறாது அரைகுறையாக நீண்ட காலமாக காணப்படுவதாக, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வீதி அபிவிருத்தி அதிகார சபையால். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, வற்றாப்பளை வீதிப் புனரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில், 3ஆம் கட்டைச் சந்திப் பகுதியில் இருந்து வற்றாப்பளை நோக்கிச் செல்லும் 05 கிலோமீற்றர் வீதியே புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இப்பணிகள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறைவு பெறாமல் அரைகுறையாக காணப்படுவதாகத் தெரிவித்த அவர், வற்றாப்பளை கிராம மக்கள் முல்லைத்தீவு நகரம், முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு வருகை தருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.
வீதிப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி புனரமைப்புப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, முடிவுறுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும் எனவும், அவர்; தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .