2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அறநெறிக்கல்வி கொடி தினம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தேசிய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு  இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம்,  நேற்று,  வவுனியா - வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் மற்றும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் என்பன செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை “பூரணத்துவமான ஆளுமைப் பண்புக்கு அடிப்படை அறநெறிக் கல்வியே!” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு  வருகின்றது.  

 வெங்கலச்செட்டிகுளம்  பஜார் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பிரதேச செயலகம் வரை அறநெறி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊர்வலம் இடம்பெற்றது.  

 பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் கை.சிவகரனால் நந்தி கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. 

அதனைத் தொடந்து அறநெறி கீதம் இடம்பெற்றதுடன், பிரதேச செயலாளரினால் அறநெறி கல்வியின் முக்கியத்துவம்  பற்றிய  உரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கே. முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சண்முகநாதன், இந்து கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு, கலாசார உத்தியோகத்தர் ரா.பிறிஸ்கா எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .