Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, கால வரையரையை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லையெனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாளிய பீரிஸ், மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியுமெனவும் கூறினார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பாகவும் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
மன்னார் மனித புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை, அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருவதாகத் தெரிவித்த அவர், எனினும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் தமக்கு நம்பிக்கை இருக்கிறதெனவும் கூறினார்.
மண் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட தடையப்பொருள்களின் ஆய்வுகளை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் ஆய்வு அறிக்கை வந்ததன் பின்னர் அணைத்து அமைப்புகளும் இணைந்து ஒரு பொறுத்தமான முடிவுக்கு வர முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக, அரசாங்கத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதன் ஒரு கட்டமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்த போதும், குறித்த கருத்து தொடர்பாக பல்வேறு கருத்துகள் சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சில பொது மற்றும் சிவில் அமைப்புகள் குறித்த இழப்பீடுகள் தேவையில்லையெனத் தெரிவித்த அவர், நீதியே தேவை என குறிப்பிட்டுள்ளனரெனவும் சில பொது அமைப்புக்கள் அதனை வரவேற்றதாகவும் கூறினார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago