2025 மே 17, சனிக்கிழமை

அறுவுறுத்தலை மறந்த பஸ்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற பஸ் ஒன்று, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுகாதார அறுவுறுத்தல்களை மீறி, அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றுள்ளது.

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி, இன்று (18) காலை பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றில் இவ்வாறான நிலை காணப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில், இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் மாத்திரமே, பயணிகளை ஏற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வவுனியாவில் சேவையில் ஈடுபடும் சில பஸ்களில், இவ்வாறான அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .