2025 மே 22, வியாழக்கிழமை

அளுத்கம பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா – அலகல்ல, அளுத்கம பகுதியில், இன்று (07) விசேட அதிரடிப்படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா – அலகல்ல, அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து, சொப்பர் விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டதையடுத்தே, இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்து.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து, நேற்று (06) மாலை, சொப்பர் விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகளை, ஈரப்பெரியகுளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன், அக்காட்டுப் பகுதியில் இருந்து சொப்பர் விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகளை மீட்டுள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதியில், மேலும் பல குண்டுகள் இருக்கலாமென சந்தேகித்து, நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில், இன்று (07), விசேட அதிரடிப்படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X