Freelancer / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்விலயத்தின் கீழ் உள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகர் தமிழ் வித்தியாலயத்திற்கு இன்று காலை பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள் மாணவர்களை மீண்டும் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்கள்
குறித்த பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை நீண்டகாலமாக காணப்படும் நிலையில், இன்று பாடசாலைக்கு ஒரு ஆசிரியர் மட்டும் வருகைதந்துள்ளார்.
தரம் 5 வரையான பாடசாலையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் கல்வியினை கற்றுக்கொடுக்கமுடியும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அதேவேளை பாடசாலைக்கு சரியான அதிபரை நியமிக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலை அனுப்பப்போவதில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
72 மாணவர்களை கொண்ட இந்த ஆரம்ப பாடசாலையில் 6 ஆசிரியர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் கடந்த 26.05.22 அன்று விபத்து ஒன்றின் போது உயிரிழந்துள்ளதை தொடர்ந்து இதுவரை எந்த அதிபரும் பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை.
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களும் இந்த பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள். கோட்டக்கல்வி பணிமனை, வலயக்கல்வி பணிமனை என்பவற்றுக்கு பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் அனைத்து மாணவர்களையும் வேறு பாடசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். R
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago