Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 27 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கொரோனா தடுப்பூசி வழங்கலில் ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரை, அதிக தொற்றாளர்கள் ஆடைதொழிற்சாலைகளில் இருந்தே அடையாளப்படித்தப்படுகின்றனரென்றார்.
இருந்தபோதும், நாட்டின் பொருளாதார நிலைமைளை காரணம் காட்டி, குறித்த தொழிற்சாலைகளை 14 நாட்களுக்கு கூட மூட முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர். வேலைக்கு செல்லாவிடின் தொழிற்சாலை நிர்வாகம் வேலையில் இருந்து தம்மை நிறுத்திவிடும் என்கின்ற நிலையில், ஊழியர்கள் கொரோனா அச்சுறுத்தல் பீதியுடன் வேலைக்கு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றதெனவும் கூறினார்.
இந்த நிலையில், ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிபவர்கள் விருப்பத்துடனும் பாதுகாப்பாகவும் வேலை செய்யும் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமாயின், எதிர்வரும் நாட்களில் வழங்கப்பட உள்ள தடுப்பூசிகளில் சிலவற்றை, ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என, தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கூறினார்.
6 minute ago
27 minute ago
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
25 Sep 2025
25 Sep 2025