2025 மே 07, புதன்கிழமை

’ஆடைத்தொழிற்சாலை இயங்கினால் கடைகள் திறக்கப்படும்’

Niroshini   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை இயங்குமாக இருந்தால், வர்த்தக நிலையங்களையும் திறப்போமென்று, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஊடக சந்திப்பின் போதே, அதன் தலைவர் நீதன், இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இங்குள்ள  9 கிராமங்ளும்; முடக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற இளைஞர்கள் - யுவதிகளை அழைத்து, குறிதத் அடைத்தொழிற்சாலை நிர்வாகம், அதன் பணியை மேற்கொள்வது என்பது வருந்தத்தக்க விடயமென்றார்.

இந்த கொத்தணிக்கே தங்களால் முடிவு காணப்படத நிலையில்,  இன்னுமொரு கொத்தணியை உருவாக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

எனவே,  இந்த ஆடைத்தொழிற்சாலையை,  ஆடைத்தொழிற்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்திய பின்னரே, அதனை திறப்பது பொருத்தமானதாக இருக்குமெனவும், அவர் கூறினார்.

ஆகவே, இந்த ஆடைத்தொழிற்சாலை இயக்குவது குறித்தும் அதன் நிர்வாகம் இயக்கும் நடவடிக்கை குறித்தும் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனத் தெரிவித்த அவர், இந்த ஆடைத்தொழிற்சாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கொரோனா தொற்று நீங்கும் வரையும் நீங்கள் பணிக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

'ஆடைத்தொழில்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை இயக்குதவற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தொற்றுக்குள்ளான ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க  சொல்லி ஜனாதிபதி எந்த இடத்திலும்  சொல்லவில்லை.

'ஆகவே, தவறான தகவல்களைப் பரப்பி, தவறான முறையில் அனுமதிகளை வழங்கி, இந்த பிரதேசத்தை இக்கட்டான நிலைக்குக் கொண்டு வருவீர்களாக இருந்தால், ஆடைத்தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட எமது வர்த்தகமானது மீண்டும் நாங்கள் கடைகளை திறந்து ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலை வரும்' என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X