Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 15 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சுகாதரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றமாறும், கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், இன்று (15) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாகத் தெரிவித்த நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமையின் (20) பின்னர், தொழிற்சாலைகளை இயக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ள விடியல், வானவில் ஆகிய ஆடைத்தொழிற்சாலைகளுக்கு எதிராக, கடந்த 10ஆம் திகதியன்று, கரைச்சி பிரதேச சபையாலும், பொதுமக்கள் சார்பாகவும், இருவேறு மனுக்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அன்றைய தினமே, இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், சுகாதார தரப்பின் அறிக்கையை கோரி, ஜுன் 15ஆம் திகதி வரை விசாரணைகளை ஒத்திவைத்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, மீண்டும், இன்று (15) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 'நேற்றைய தினம் (14) கரைச்சி பிரதேச சபைக்கு, குறித்த இரண்டு தொழிற்சாலை நிர்வாகங்கால், கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தும், தொற்று நோய் கட்டுப்படுத்தலை முறையாக பேணும் வகையிலும் தொழிற்சாலையை இளக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமிடத்து, குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும்' என, பிரதேச சபை சார்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
அதற்கு அமைவாக இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததற்கு அமைவாக, குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக, நீதவான் தெரிவித்தார்.
இதேவேளை, மன்றில் ஆஜராகியிருந்த கரைச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, குறிதத் இரு ஆடைத்தொழிற்சாலைகளினதும் நிலைவரம் தொடர்பிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சாலை நிர்வாகங்கள் ஒத்துழைப்பது இல்லை எனத்; தெரிவித்தார்.
ஆடைத்தொழிற்சாலைகளின் ஊழியர்களின் விவரம், குழுக்களின் விவரம், போக்குவரத்து முறைகள், தங்குமிட விவரம் உள்ளிட்ட விடயங்களை கேட்டிருந்த போதும், அவர்கள் உரிய நேரத்தில் தரவில்லை னெத் தெரிவித்த சுகாதார அதிகாரி, விடியல் நிறுவனம் கடந்த 15 நாள்களளவிலேயே இவ்விவரங்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
'அதனால், தனிமைப்படுத்தல் விதிகளை பேண முடியாதுள்ளது. தொற்றாளர் ஒருவர் பழகிய அல்லது நெருக்கமானவர்களை அடையாளம் காண முடியாத நிலை காணப்படுகிறது' என்றார்.
சுகாதார அதிகாரியின் கருத்தை கவனத்தில் கொண்ட நீதவான், தொழிற்சாலைகளின் ஊழியர்களின் விவரம், குழுவாக பணி புரிவதால் குழுக்களின் விவரம் ஆகியவற்றை வழங்குமாறும் குழுக்களில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பிலான தகவலை வழங்குமாறும் எத்தரவு பிறப்பித்தார்.
மேலும், தொழிற்சாலைகளின் ஊழியர்கள் தங்கியுள்ள பகுதிகள், போக்குவரத்து முறைகள் உள்ளிட்ட தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான், குறித்த தகவல்களை உரிய முறையில் இரகசியம் பேணப்படும் வகையில், சுகாதார வைத்திய அதிகாரி முழுமையாக தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தொழிற்சாலை ஊழியர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் 'விடியல்' ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் நாளை (16) பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் அறிக்கையை, வியாழன் (17) அல்லது வெள்ளிக்கிழமை (18) தொழிற்சாலை நிர்வாகத்துக்கு வழங்குமாறும், 'வானவில்' ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான பரிசோதனையை வியாழக்கிழமை (17) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (18) மேற்கொண்டு, சனிக்கிழமை (19) அறிக்கையை வழங்குமாறும், மன்று கட்டளை பிறப்பித்தது.
பரிசோதனையின் முடிவுகளைக் கொண்டு, பணியில் அமர்த்தக்கூடியவர்களை அழைத்து, ஞாயிற்றுக்கிழமையின் (20) பின்னர் தொழிற்சாலைகளை இயக்குமாறும், நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் எனத் தெரிவித்த நீதவான், குறித்த வழக்கை முடிவுறுத்துவதாகவும் வழக்கின் தீர்மானத்துக்கு அமைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை, மன்றுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி அறிக்கையிடுமாறும், உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago