2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில், இன்று (27) காலை உருக்குழைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்கரை பகுதியில், கடற்படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே,  கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில், தலைமன்னார் பொலிஸாருக்கு  தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, தலைமன்னார் பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .