2025 மே 15, வியாழக்கிழமை

‘ஆதன வரியை குறைக்காவிடின் வெகுஜன போராட்டம் மேற்கொள்ளப்படும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படவுள்ள அதிகரித்த  ஆதன வரியை   மக்களின் நலன் கருதி  குறைக்காது விடின், பாதிக்கப்படவுள்ள மக்களை ஒன்றுதிரட்டி, வெகுஜன  போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, கரைச்சி பிரதேச சபையின்  சமத்துவக் சட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் கட்சி அலுவலகத்தில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்துரைத்த அவர்கள், கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முன்னிலையில் இருப்பதாகவும்இப்படியான ஒரு மாவட்டத்தில் புதிதாக ஆதனவரி அறவிடுகின்ற போது எடுத்த எடுப்பிலேயெ பத்து வீதம் என்கின்ற அதிகரித்த வீதத்தில் அறவிடுவது மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளிவிடுமெனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .