2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆனையிறவு சோதனைச் சாவடி நீக்கம்?

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று (07) நள்ளிரவு முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டன.

தற்போது, நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன.

எனினும், ஆனையிறவு பகுதியில் மாத்திரம் சோதனை சாவடி நீக்கப்படாமைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர். 

இந்த நிலையிலேயே ஆனையிறவு சோதனைச்சாவடி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X