2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஆபத்தில் அந்தோனியார்புரம் கிராமம்

George   / 2017 மே 09 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மன்னார் மாந்தை மேற்கின் அந்தோனியார்புரம் கிராமத்துக்குள் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன்,“கடல் நீர் உட்புகுவதன் காரணமாக நன்னீர் கிணறுகள் உவர் நீராக மாறுவதுடன் நிலம் உவர் நிலமாக மாறி எதிர்காலத்தில் இங்கு மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும்” என்றும் அந்த மக்கள் கூறுகின்றனர்.

“இக்கிராமத்தில் 170 வரையான குடும்பங்கள் வசித்து வருவதுடன், மழை காலங்களில் கடல் பெருக்கெடுக்கும் போது கிராமத்தின் நடுப்பகுதிக்குள் உவர் நீர் உட்புகுந்துவிடுகின்றது. இதனைத் தடுப்பதற்கு தடுப்பணை அமைக்குமாறுஅரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

“கடல் அரிப்பினால் எதிர்காலத்தில் அந்தோனியார்புரம் கிராமம் முழுமையாக அழிவடைந்து விடும் ஆபத்து உள்ளது. கிராமத்தை உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் குறைந்த கிராமமாக அந்தோனியார்புரம் காணப்படுவதுடன் குடிநீர் நெருக்கடியும் இக்கிராமத்தில் காணப்படுகின்றது” என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .