2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆரோக்கியபுரத்துக்கான குடிநீர் விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பம்

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரத்தில் குடிநீர்த் திட்டத்துக்கான வேலைகள் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் வாரத்தில் இருந்து குடிநீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக துணுக்காய் பிரதேச சபை அறிவித்துள்ளது.

'குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் தேவையினை நிறைவு செய்யும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இறுதிக்கட்ட பணிகள் நிறைவுப் பெற்றதுடன் குடிநீர் விநியோகம் ஆரம்பமாகும்' என தெரிவிக்கப்படுகின்றது.

துணுக்காயின் அமைதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம், கல்விளான், உயிலங்குளம், ஆலங்குளம் ஆகிய கிராமங்களும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வரட்சியான காலங்களில் துணுக்காய் பிரதேச சபையினரால் குடிநீர் வநியோகம் மேற்கொள்வது வழமையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .