2025 நவம்பர் 15, சனிக்கிழமை

’ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை’

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாணத்தில், ஆசிரியர் நியமனங்கள் நிரம்பல் நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்த மாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்,  நிரம்பல் நிலை, 98 சதவீதமாக இருக்கும் நிலையில், பரம்பல் நிலையே தற்போது பிரச்சினையாக இருப்பதாகவும் கூறினார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நேற்று  (21) நடைபெற்றது.

இதன்போது, வவுனியா தெற்கு வலயத்தில் 23 ஆசிரியர்களும், வடக்கு வலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 145 பேரும், ஏனைய சில பாடங்களுக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்களும் நிலவுவதாக, வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், வடக்கில் 12 மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியரே இருப்பதாக,  வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் தொகுதிப் பாடசாலைகளை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், முல்லைத்தீவில் இருந்து வவுனியாவுக்கு ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும், இளங்கோவன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X