2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’ஆற்றுக்கு குறுக்காக தடுப்புச் சுவர்களை அமைக்கவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பாலியாற்றில் இடம்பெறும் மண் அரிப்பை தடுக்கும் வகையில், ஆற்றுக்கு குறுக்காக தடுப்புச் சுவர்களை அமைக்குமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனிக்குளத்தின் கீழ் உள்ள பாலியாறு, முன்பு ஆழம் குறைந்த ஆறாகவே காணப்பட்டது. தற்போது மண் அரிப்பு காரணமாக ஆற்றின் ஆழம் ஐம்பது அடியையும் தாண்டிவிட்டது.

காலப்போக்கில் இவ்வாறு  அரிப்பு ஏற்பட்டு மேலும் ஆழமாகக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் அதற்கான தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்குறித்த ஆற்றுக்குக் குறுக்காக தடுப்பு சுவர்களை அமைக்கப்படுவதற்கான போதிய நிதி மூலங்கள் தங்களிடம் இல்லை எனவும் நிதி கிடைக்கும் பட்சத்தில் மேற்படி வேலைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X