Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், பிரதேச மக்களுக்கான கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.
மல்லாவி,மாந்தைகிழக்கு பிரதேசங்களில் கொவிட் நோயாளர்களின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றமையினால் பல இந்து ஆலயங்களில் இருந்து விசேட திருவிழாக்கள் மற்றும் பொங்கல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரப்படுவதாலும்,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி க.சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
பிரதேசத்திற்கு உட்பட்ட சகல வழிபாட்டு தலங்களிலும் வழமையான ஆராதனைகளை பத்து அல்லது அதற்கு குறைந்தோரின் பங்குபற்றுதலுடன் நடத்தமுடியும்.
எனினும், விசேட ஆராதனைகள் பொங்கல் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் என்பவற்றை நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு வழிபாட்டு தலங்களிலும் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்ககள் வழிபாட்டில் ஈடுடல் அல்லது வழிபாட்டு தலங்களில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறுதல் போன்றவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராம சேவகர் ஊடாக இந்த அறிவிப்பு வழிபாட்டு தலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R
8 minute ago
35 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
35 minute ago
56 minute ago
1 hours ago