2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

ஆலயங்களில் கொள்ளை; நால்வருக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியிலுள்ள ஆலயங்களில் கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை, 21ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புத்தளத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து ஆலய உற்சவங்களில் கலந்துகொள்வது போன்று பாசாங்கு செய்து, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

 சந்தேகநபர்களை, கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், நேற்று முன்தினம் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .