Editorial / 2023 மார்ச் 01 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டிடம் மண்டக்கல்லாறு உவர் நீர் தடுப்பணை ஆகியவை மிகத் துரித கதியில் அமைக்கப்படும் என ஆளுனரின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
வன்னேரிக்குளம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று 28.02.2023 வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்து கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்களில் காணப்படும் தாமதம் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர்.
இதன் விளைவாக 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படவுள்ள வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டிடம் மிக துரித கதியில் ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பல தசாப்த கால கோரிக்கையாக இருந்த மண்டக்கல்லாறு உவர் நீர் தடுப்பணை அமைப்பதில் இருக்கும் தடைகளை ஆராய்ந்து குறித்த வேலைத்திட்டமும் துரித கதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுனரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மண்டைக்கல்லாறு திட்டம் ரூ. 495 மில்லியனில் மதிப்பீடுகள் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படாததன் காரணமாக தற்போது வேலைகள் இடம் பெறாது உள்ளது. மண்டைக்கல்லாறு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வன்னேரிக்குளம் கிராம சூழலில் உள்ள சிறிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் உவர்ப் பரம்பலையும் கட்டுப்படுத்தக் கூடிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
58 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago