Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், சுயதொழில் மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் தடையாக இருப்பதாக தெரிவித்து ஆளுநரை சந்திக்க சென்ற போது, உத்தியோகத்தர்களும் தடையாக இருப்பதாக, சிறுசிற்றுண்டி உற்பத்தி செய்யும் வியாபாரி ஒருவர், இன்று தெரிவித்தார்.
குறித்த வியாபாரி மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியாவில் சிறு சிற்றுண்டி வியாபாரம் செய்துவரும் எனக்கு சுகாதார அதிகாரிகள் இடம் தரவில்லை. தொடர்ந்தும் இடையூறு விளைவிப்பதால் எனக்கு நீதி தேவை என கடந்த வருடம் உயர் அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுத்தேன். அதனை தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன், சுகாதார உத்தியோகத்தர்கள் எனது வீட்டுக்கு வந்து உற்பத்தி பொருட்கள் செய்ய வேண்டாம் என கூறியதையடுத்து சுகாதார உயர் அதிகாரியை சந்தித்து நான் கடந்த 10 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகின்றேன். எனது வியாபார உற்பத்தி இடத்தை வந்து பார்வையிட்டு அனுமதி தருமாறு கூறினேன். வந்து பார்ப்பதாக கூறினார். ஆனால் இன்றுடன் பத்து நாட்கள் கடந்தும் இதுவரை வந்து பார்க்கவில்லை.
“இதனால் எனக்கு இடம்பெறும் அநீதிகளை எடுத்துகூற நேற்றைய தினம் 2.10 மக்கள் சந்திப்பு நாளில் ஆளுநரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அங்கு நின்ற ஆளுநரின் உத்தியோகத்தர்கள் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. அத்துடன், இத் தொழில் செய்யாததால் எனது வருமானம் பாதிப்படைந்துள்ளதுடன் எனது பிள்ளைகள் கூட படிப்பை தொடர முடியாத நிலையும் காணப்படுகின்றது.
“அத்தோடு, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் வடமாகாண இணைப்பாளரால் ஆளுநருக்கென என்னிடம் தந்திருந்த கடிதத்தை கொடுக்க வேண்டும் என கூறியும், அதனை எங்களிடம் கொடுங்கள் என கூறி கடிதத்தை உடைத்து ஆளுநர் பார்த்தாலும் ஒன்று தான் நாங்கள் பார்த்தாலும் ஒன்று தான் என கூறி கடிதத்தை உடைத்து பார்த்தார்கள்.
“இதனால், இன்று எனது பிரச்சினையை யாரிடமும் சொல்லவும் முடியாவில்லை. எனது தொழிலை நடத்தவும் முடியவில்லை” என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
2 hours ago
4 hours ago