சண்முகம் தவசீலன் / 2018 ஏப்ரல் 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“காணிக்கான ஆவணங்கள் இருந்தும் காணிக்குள் நாங்கள் வாழமுடியாத நிலையில், வீதி ஓரங்களில் வாழ்கிறோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அனைத்து அசையும் சொத்துக்களை மட்டுமல்ல, அசையா சொத்துக்களையும் கைவிட்டு தெருவோரங்களில் ஏங்கிக்கொண்டிருப்பவர்கள். காணிக்கான ஆவணங்கள் இருந்தும் காணிக்குள் நாங்கள் வாழ முடியாத நிலையில் இன்று கேப்பாபுலவில் ஒரு ஆண்டுக்கு மேலாக மக்கள் காத்திருக்கின்றார்கள். எங்கள் வலிகள் வேதனைகளை எந்த ஒரு கொடுப்பனவும் ஈடுசெய்யாது. ஆனாலும் இந்த அமைச்சின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோன்.
இறுதிப்போரின்போது கைவிடப்பட்ட குறிப்பாக வாகனங்களின் ஆவணங்களை மக்கள் இப்பொழுதும் வைத்துள்ளார்கள். இந்த ஆவணங்கள் உள்ள அந்த சொத்துக்களுக்கு ஈடாக கொடுப்பனவுகளை கொடுப்பதுக்கு ஆவண செய்யவேண்டும். அதேபோன்று வங்கி கணக்கில் வைப்பு செய்த பணத்துக்கான ஆவணம், அடைவு வைத்த ஆவணங்களை இப்பொழுதும் மக்கள் வைத்திருக்கின்றார்கள். எனவே இறுதிபோரின் போது சொத்துக்களை இழந்து ஆவணங்களை வைத்துள்ள மக்களுக்கு காயப்பட்டவர்கள் உறவுகளை இழந்தவர்களுக்கான நட்ட ஈடுகள் இதுவரை கொடுக்கப்படாது இருக்கின்றது அவற்றை கொடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும்” என தெரிவித்தார்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025