2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இ.போ.ச ஊழியர்களுக்கும் விடுமுறை

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், பொது போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன், இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும், இன்றும்  நாளையும்,  இரண்டு நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான உத்தரவை, இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் அனைத்து சாலைகளுக்கும் வழங்கியுள்ளது.

பொதுபோக்குவரத்தின் ஊடாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டே, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .