2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இ.போ.ச வுனியா சாலை ஊழியர்கள் 6 மணிநேரப் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சிலரால், இன்றைய தினம் (02), பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பதவி உயர்வு வழங்கப்பட்டு, அப்பதவி இரத்துச் செய்யப்பட்டவர்களை, தொடர்ந்தும் அதே பணியில் வைத்திருக்காது, நியமனக் கடிதத்தின் பிரகாரம் எவ்வாறான பதவி வழங்கப்பட்டதோ அப்பதவிகளுக்கே அவர்களை நியமிக்குமாறு கோரியே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, இன்று (02) காலை 5 மணியளவில் இருந்து, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான எந்தப் பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை.

இதற்கிடையில், ஊழியர்களுக்கும் மற்றுமொரு அணியினருக்கும் இடையில் சிறு முரண்பாடும் ஏற்பட்டது. இருப்பினும், பணிப்பகிஷ்கரிப்பு, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய சாலை முகாமையாளர், அவர்களது கோரிக்கைகளில் ஒன்றான பதவி உயர்வு வழங்கப்பட்டு அப்பதவி இரத்து செய்யப்பட்டவர்களை, இன்றிலிருந்து அப்பதவியிலேயே நியமிப்பதாகத் தெரிவித்ததையடுத்து, முற்பகல் 11 மணியளவில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .