Princiya Dixci / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட தச்சடம்பன் புதிய நகர் கிராமத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடொன்றின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.
2012ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சின் கீழ், “புதிய நகர் கிராமம்” என்று மாதிரிக் கிராமமாக 75 வீடுகளை கட்டி மக்களை மீள் குடியேற்றியுள்ளார்கள்.
இன்று 9 ஆண்டுகளே கடந்துவிட்ட நிலையில், வீடுகளின் சுவர்கள் வெடித்து விழும் நிலையிலும் கூரைகள் உடைந்து விழும் நிலையிலும் காணப்படுகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் கிடைத்த காலத்தில் இருந்து வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றின் வீட்டின் கூரையே அண்மையில் உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டுக்குள் எவரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் எதும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசால் கட்டிக்கொடுக்ப்பட்ட வீடுகளின் தற்போதைய நிலை தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய நகர் கிராமத்தில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதி என்று கூறிக் கட்டிக்கொடுக்கப்பட்ட 75 வீடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், வீடுகளின் இந்த நிலைமையை கருத்தில்கொண்டு, உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025