Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்க இணைப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது, வெறுமனே செய்தியே ஒழிய, உறுதியான தகவல்கள், ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது கட்சி ஆதரவாளர்கள் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
வவுனியா வாடி வீட்டில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக மேலதிகமாகச் சொல்ல விரும்பவில்லையென்றார்.
அத்துடன், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம், தமிழ் பிரதிநிதிகளே என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பலரிடம் தெரிவித்தும், இதுவரை அது தீர்க்கப்படவில்லை எனவும் இப்பிரச்சினை தொடர்பாகத் தான் அமைச்சரவையில் பேசவுள்ளதாகவும் கூறினார்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தன்னைச் சந்திக்க மறுத்தது தொடர்பாகத் தனக்குத் தெரியாதெனத் தெரிவித்த அவர், தான் கொழும்புக்கு அவசரமாகச் செல்லவிருந்ததால், அவர்களுடனான சந்திப்பைப் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்ததாகவும், அமைச்சர் மேலும் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago