2025 மே 21, புதன்கிழமை

‘இதுவரை தொழில்வாய்ப்புகள் இல்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தம் நிறைவுற்றப் பின்னர், வடக்கில் தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது இதுவரை நிறைவேற்றிக்கொடுக்கப்படவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி, மாயவனூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு, இன்று (18) மாயவனூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யுத்தம் நிறைவுற்ற பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இங்குள்ள அனைவருக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்ததாகவும் அதனையே பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், இதுவரை எவையும் நடைபெறவில்லையெனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .