2025 மே 05, திங்கட்கிழமை

’இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது’

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்திய-இலங்கை அமைதி  ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே ஜுலை 29, 1987ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகுமென்றார்.

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின்படி, நிலத்தை விநியோகிக்கும் அதிகாரம் வட மாகாணத்துக்கு தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், வட மாகாணத்திலிருந்து சிங்களவருக்கு எந்த நிலங்களையும் விநியோகிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இது சர்வதேச ஒப்பந்தத்தின் மொத்த மீறலாகுமெனவும் கூறினார்.

தமிழரின்  விருப்பத்துக்கு எதிராக என்ன செய்தாலும் அது சர்வதேச சமூகத்தால் மாற்றப்படுமெனவும், அவர் கூறினார்.

எனவே, அமெரிக்காவும் இந்தியாவும்  தமிழருக்கு அரசியல் தீர்வைக் காணும் வரை  அரசாங்கம் காத்திருக்க வேண்டியது நல்லதெவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X