2025 நவம்பர் 05, புதன்கிழமை

இந்திய மீனவரின் அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ். குடா கடற்பரப்பில், இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் அவர் கூறியதாவது:

நெடுந்தீவு தொடக்கம் நைனாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை, இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக, எமது தொழிலாளர்களுடைய சொத்துகள் அழிக்கப்படுகின்றன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து, தொழிலாளர்களுடைய சொத்துகளை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரை பகுதியில், வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X