Niroshini / 2021 ஜனவரி 28 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்குமென்று, பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இலங்கை கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவது தொடர்பாக, தமிழ்த் தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தங்களைப் பொறுத்த வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களிலே மிகுந்த அக்கறை இருக்கின்றதென்றார்.
இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு, தாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோமெனவும், அவர் கூறினார்.
இலங்கையின் பல இடங்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் கூறினார்.
இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்குமெனவும், செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025