2025 மே 05, திங்கட்கிழமை

’இன்னும் ஓரிரு நாட்களில் 1,500 பேருக்கு பிசிஆர்’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களில்; 1,500 பேருக்கு இன்னும் ஓரிரு நாட்களில பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (24) நடைபெற்ற கொரோனா தொடர்பான முக்கிய கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள், முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரெனவும் மீதியாக உள்ள 700 பேர் வரையில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்கின்றோமெனவும் கூறினார்.

இதன் முடிவில் 700 பேருக்கும் பிசிஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளனவெனத் தெரிவித்த அவர், இன்னும் ஒரிரு நாட்களில் கிட்டத்தட்ட 1,500 பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

இதில் உள்ள சவால்கள் மிகவும் பெரியவை எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X