Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வீட்டிலிருந்த தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை என கணவனால், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக் குளம் பகுதியைச் சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி (வயது 32), பிள்ளைகளான டனிஸ்கா (வயது 5) மற்றும் கனிஸ்கா (வயது 4) என்ற மூவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த 2021.08.10ஆம் திகதி காலை வீட்டில் இருந்துள்ளனர். எனினும், வேலைக்குச் சென்ற கணவன், அன்று மாலை வீடு திரும்பிய போது, அவர்கள் வீட்டில் இருக்கவில்லை.
இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண் மற்றும் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0777111103, 0775945839 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago