2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘இயற்கை வளங்கள் சூரையாடல் அதிகரிப்பு’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

வழித்தட அனுமதிகள் நீக்கத்தின் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெருமளவான இயற்கை வளங்கள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனவென, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.  

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பிரதேசச் செயலகங்களுக்கும் மாவட்டச் செயலகத்துக்கும் இத்தகவல்கள் தெரியுமெனவும் ஆனால், இயற்கை வளம் கொண்டு செல்வதைத் தடுக்க முடியாதுள்ளதாகவும் கூறினார்.  

முல்லைத்தீவு மாவட்டம், ஏற்கெனவே கடும் பாதிப்புகளுடன் உள்ள நிலையில், இயற்கை வளங்களையும் இழப்போமானால், அது பெரும் பாதிப்பாக அமைந்து விடுமெனவும், ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .