Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு குமுழமுனைக் கிராமத்தில் இரு மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தடுப்பதில் முல்லைத்தீவு பொலிஸார் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருவதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று நாட்களாக குமுழமுனை, ஆறுமுகத்தான்குளம் ஆகிய இரு கிராம மக்களிடையே பிணக்குகள் ஏற்பட்டு அது மோதலாக வெடித்த்தில் ஒருவர் காயமடைந்து, முல்லைத்தீவு வைத்தியசலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
“மோதல் தொடர்பாக பொலிஸாருடன் அலைபேசிமூலம் தொடர்புகொண்ட போது, பொலிஸார் தொடர்புகளை துண்டித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டாலும் நீண்ட நேரம் தாமதமாகிய பின்னரே பொலிஸார் கிராமத்துக்கு வருகின்றர்” என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் தாமதமாக கிராமத்துக்கு வருவதன் காரணமாகவே சண்டைகள் தீவிரமடைந்து வருவதாகவும் மக்களினால் குற்றச்சாட்டப்படுகின்றது.
“முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் பிரதேச செயலக மட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் பொலிஸார் நடாத்தும் சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களில் ஏதாவது பிணக்குகள் கிராமங்களில் ஏற்பட்டால் தாம் விரைந்து வருவோமெனத் தெரிவித்து அலைபேசி இலக்கங்களை வழங்கும் பொலிஸார், பிணக்குகள் ஏற்படும்போது அசமந்தப்போக்கை கடைபிடிக்கின்றனர்” என கிராம மக்கள் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
2 hours ago