2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரட்டைக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

கிளிநொச்சி - ஜெயந்திநகர் பகுதியில், தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேநபரை, தொடர்ந்து 14 நாள்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டது.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், கொல்லப்பட்டவர்களின் அயல் வீட்டைச் சேர்ந்தவரே, நேற்று (31) கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் த.சரவணராஜா மேற்கண்ட விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

இதேவேளை, படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸால், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அருகிலுள்ள கிணறொன்றிலிருந்து, கூறிய இரும்புக் கம்பியொன்றையும் அலை​பேசியொன்றையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .