2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரணைதீவில் தங்கிநின்று தொழில் செய்வதற்கு அனுமதி தாருங்கள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 


- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடல் வளம் கொண்ட எமது மண்ணில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதியை எங்களுக்குப் பெற்றுத்தாருங்கள் என்று கிளிநொச்சி இரணைதீவு கடற்தொழிலாளர்கள், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமாதா நகர் மக்களை, ஞாயிற்றுக்கிழமை (04) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், கடற்படையின் அனுமதியைப்பெற்று கடற்படையின் உதவியுடன் இரணைதீவுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டபோது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் கடற்தொழிலாளர்கள் தமது கோரிக்;கைகளை முன் வைத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இரணைதீவு எனும் கடற்றொழில் கிராமத்தில் யுத்தத்துக்கு முன்னர் பல தலைமுறைகளாக வாழ்ந்த 240 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 1992 ஆம் ஆண்டளவில் நாட்டில் நிலவிய அசாதார சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மக்கள் முழங்காவில் பகுதியில் குடியமர்த்தப்பட்டு இரணைமாதா நகர் என்ற குடியிருப்பு பகுதியை உருவாக்கித் தங்கவைக்கப்பட்டனர்.  

இவர்களுக்கு வீடமைப்புத்திட்டம், மின்சாரவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான பாடசாலையொன்றும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவு பெற்று 7 ஆண்டு கடந்துள்ள போதும், இந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் சொந்த நிலத்தில் சென்று வாழ அனுமதி கொடுக்கப்படவில்லை. என்ற போதிலும் அப்பகுதியில் தங்கியிருந்து தொழில் செய்வதற்கான அனுமதியையாவது பெற்றுத் தருமாறு நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .