2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும்’

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்,  எஸ்.என்.நிபோஜன் 

இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்ற அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இரணைதீவு மக்கள், மீளக்குடியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 2017.02.08ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன ஆகியோருடன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேர உரையாடல்கள் நடாத்தப்பட்டிருந்தது.

“1899ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்டஅரச வர்த்தமானி அறிவித்தலின்படி 1934ஆம் நவம்பர் 13ஆம் திகதி குறித்த தீவு கத்தோலிக்க திருச்சபைக்கும் அதன் பங்கு மக்களுக்கும்  வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் அம்மக்களின் பூர்விக வாழ்வுரிமை  நிலம் இரணைதீவு என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்களோ, அங்கு மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு குடியேற்ற மறுக்கின்றமை ஐ.நாவின் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 “நல்லிணக்கப்பொறிமுறைகளை நம்பிக்கையுடன் கட்டியெழுப்ப, இரணைதீவுக்குடியேற்றம் முன்னுதாரணமாக திகழவேண்டும் என்பதே அம்மக்களின் விருப்பமாகும்.

“ஆகவே, இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து யாழ்ப்பாண ஆயர், இரணைதீவு பங்குத்தந்தை அவர்களுடனும், அரச அதிகாரிகளுடனும் குறித்த மக்களுடனும் நேரடிக்கலந்துரையாடல்களை நிகழ்த்தி, இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்துமாறும், அவர்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்துக்குத் தங்களின் நல்லாட்சியில் நீதி வழங்குமாறும் தயவுடன்  கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .